Top Story 1உள்நாட்டு செய்திகள்

கிரிஷ் வழக்கிலிருந்து நீதிபதி ஒருவர் விலகல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று (27) அறிவித்துள்ளார்.

சனத் பாலசூரிய மற்றும் பொத்தல ஜயந்த ஆகிய இரு நபர்கள் பேஸ்புக்கில் தன்னைப் பற்றி பதிவிட்ட கருத்துகளைத் தொடர்ந்து தான் இந்த முடிவை எடுத்ததாக நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, வழக்கை விசாரிக்க பொருத்தமான நீதிபதியை நியமிப்பதற்காக அதனை கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திக்கே முன்னிலைக்கு அனுப்புவதாகவும் அவர் திறந்த நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

Related posts

மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

wpengine

பொலிஸ் மா அதிபரின் இடமாற்ற அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

wpengine

வீசா சலுகை இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து பங்களாதேஷ் இலங்கை அரசிடம் விளக்கம் கோருகிறது..

wpengine