உள்நாட்டு செய்திகள்

கிரிவெஹர ரஜமஹா விகாரை தேரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்…



கதிர்காமம், கிரிவெஹர ரஜமஹா விகாரையின் தலைமை விகாராதிபதி கோபாவக தம்மிந்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனந் தெரியாத நபர்களினால் நேற்றிரவு(12) இந்த துப்பாகிச் சூடு ரஜமஹா விகாரை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த விகாராதிபதி ஹம்பாந்தோட்டை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

குறித்த துப்பாக்கிதாரிகள் ஜீப் ரக வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளதுடன் குறித்த வாகனம் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UP – CAG-8531 என்ற இலக்கமுடைய ஹொண்டா வெஸல் வகையைச் சேர்ந்த ஜீப் வண்டி ஒன்றே துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றர்.

தேரர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சம்பவம் குறித்த விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிறுமி ஆயிஷா படுகொலை; விசாரணை வளையத்துள் தந்தை

wpengine

எதிர்வரும் காலங்களில் நீர்க்கட்டணமும் அதிகரிக்கப்படும் – நகர திட்டமிடல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்

wpengine

துறைமுக நகரம் : மனு விசாரணை ஆரம்பம்

wpengine