உள்நாட்டு செய்திகள்

கிரித்தலே இராணுவ முகம் முன்னதாக மூடியிருக்க வேண்டும் – பீல்ட் மார்ஸல்



கிரித்தலே இராணுவ முகாமினை இதற்கு முன்னதாகவே மூடியிருக்க வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிரித்தலே இராணுவ புலனாய்வு முகாம் சில காலங்களுக்கு முன்னதாகவே மூடியிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்திருந்தால், நீதிமன்ற உத்தரவுகளை எதிர்நோக்க இராணுவத் தளபதிக்கு நேர்ந்திருக்காது.

எவ்வாறெனினும் பிந்தியேனும் குறித்த இராணுவ முகாம் மூடப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது எனவும், விசாரணைகளை நடாத்த சுயாதீனமான பின்னணி இருக்க வேண்டும் எனவும் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Related posts

விஜிதமுனி சொய்சாவின் உறுப்பினர் பதவி

wpengine

கட்சியின் தீர்மானத்தினை மீறினால் கட்சி உறுப்புரிமை பறிக்கப்படும் – பொதுஜன பெரமுன அதிரடித் தீர்மானம்..!

wpengine

இலங்கை டெலிகொம் நிறுவன தலைவர் இராஜினாமா

wpengine