ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிரிக்கெட் வீரர்களுடன் தமது மனைவியை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாட்டு பயணத்தின் போது கிரிக்கெட் வீரர்களுடன் மனைவியை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே சானியா மிர்சா இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நமது கிரிக்கெட் அணி உட்பட பல விளையாட்டு அணியினர் வெளிநாடு செல்லும் போது அவர்களுடன் அவர்களது மனைவியையோ அல்லது காதலியையோ அழைத்து செல்ல அனுமதிப்பதில்லை.

இவர்களை உடன் அழைத்து சென்றால் வீரர்களின் கவனம் சிதறி விடும் என்று காரணம் சொல்வார்கள். அப்படியென்றால் பெண்கள் தான் ஆண்களின் கவனத்தை அதிகமாக சிதறச் செய்கிறார்களா? வாழ்க்கை துணை உடன் இருக்கும் சமயத்தில், விளையாடி விட்டு தனது அறைக்கு திரும்பும் அந்த வீரர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை பாருங்கள். அவர்கள் அளிக்கும் ஆதரவு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.

விராட் கோலி சரியாக விளையாடாத போது, அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை விமர்சித்தது முட்டாள்தனமானது.

Related posts

03 வருடங்கள் கழித்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் யாழ் நோக்கி மஹிந்த…

wpengine

சமையல் எரிவாயுவின் விலையில் மீளவும் அதிகரிப்பு…

wpengine

மைத்திரியின் முடிவால் மகிழ்ச்சியில் மஹிந்த! குண்டு துளைக்காத வாகனங்கள் எங்கே….?

wpengine