ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிரிக்கெட் நட்சத்திரம் அம்லா யாரெண்டு முழு உலகமும் அறிந்து கொள்வார்கள்



பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது பழமொழி, ஆனால், பணத்திற்கு அடிமையாகாது கொள்கைகளுக்கும் தன்மானத்திற்கும் முக்கியத்துவம் வழங்குவோர் ஆயிரத்தில் ஒருவன் இருப்பான். அவ்வாறானதொரு தன்மானமுள்ள வீரரினைப் பற்றியே நாம் இப்போது கூறப்போகின்றோம்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரரான ஹஷீம் அம்லா முஸ்லிம் மதத்தவர். அவர் அவரது மதத்தினை நிந்திக்கக்கூடிய எதுவாக இருந்தாலும் புறக்கணிப்பதில் தயங்கமாட்டார்.

குறிப்பாக இஸ்லாம் மதத்தில் மதுபானம் பயன்படுத்தலோ, அதன் விற்பனைக்கு துணைபோவதோ தடை செய்யப்பட்டதொன்றாகும். அம்லா குறித்த தடையுத்தரவினை அப்படியே பின்பற்றுவராக இருக்கிறார்.

தென்னாபிரிக்கா  அணிக்கு உலகிலேயே முதற்தரமான  மதுபான வகையொன்று அனுசரைனை வழங்குவதால் போட்டியொன்றிலிருந்து அப்போட்டியினது ஜெர்சியினை அணிவதை தவிர்த்ததால் போட்டியிலிருந்து விலகவும் நேர்ந்தது.

அவ்வாறே இம்முறை இந்தியன் பிரீமியர் (IPL) போட்டியில் கிங்க்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார்.அவ்வணிக்கும் உலகில் தரமுயர்ந்த மதுபான வகை ஒன்றே அனுசரணை  வழங்குகின்றது.

அதுஎவ்வாராயினும், அம்லாவின் ஜெர்சியில் குறித்த அனுசரணை நீக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுசரணை வழங்கும் ஜெர்சியினை அணிவதை தவிர்த்தால் குறித்த வீரருக்கான ஏலப்பணத்தில் சிறு தொகை குறைக்கப்படுகின்றமையும் வழக்கமே.

இதனால் அம்லாவின்  ஏலப்பணத்தில் ஒருபகுதி குறைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, நான் பௌதன், நான் கிறிஸ்தியானி, நான் முஸ்லிம் , நான் ஹிந்து என வாய்பேச்சில் மட்டும் இருக்காது அம்லா ஒரு  முன்மாதிரியாய்  திகழ்கிறார்.

Related posts

வித்தியாவின் பெண்குறிக்குள் பலரின் விந்தணுக்கள் இருந்ததால் மரபணுச் சோதனையில் பாரிய சிக்கலாம்

wpengine

கோட்டாவே ஜனாதிபதி – எந்தவொரு பந்தயத்திற்கும் தயார் – சிறிசேன

wpengine

மஹிந்தவின் பையை சோதனையிட மறுத்த ரணில்! காரணம் என்ன?

wpengine