ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிரிக்கெட்டை விட மிகப்பெரிய வரம் இவர்தான் – விராட் கோலி



(FASGOSSIP|COLOMBO) – அனுஷ்கா சர்மா என் வாழ்வில் கிடைத்தது கிரிக்கெட் கிடைத்ததை விட மிகப்பெரிய வரம் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பாராட்டி பேசியுள்ளார்.

4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இதேவேளை, இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுடன் தற்போது விளையாடி வருகிறது இதற்காக மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள விராட், அங்கு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாடினார்.

அப்போது பேசிய கோலி, ‘அனுஷ்கா சர்மா என் வாழ்வில் கிடைத்தது கிரிக்கெட் கிடைத்ததை விட மிகப்பெரிய வரம். மிகச்சரியான துணையை தேர்ந்தெடுத்துள்ளேன். ஏனென்றால், அவரது பணிகளை அவராகவே சிறப்பாக செய்து வருகிறார். அதோடு எனக்கான இடத்தையும் சரியாக கொடுக்கிறார்.

என்னை சரியான பாதையில் வழிநடத்துவதும் அவர்தான். அவரிடம் இருந்து இன்னும் நிறைய கற்றுக் கொள்வேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையமும் மேயும் மாடுகளும்

wpengine

கல்கிஸ்ஸையில் ஒருவர் கொலை

wpengine

மணி சாரின் படத்தில் நடிக்க வேண்டும் – பொலிவுட் நாயகி

wpengine