ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“கிரிக்கெட்டை கைவிட்டு வேறு வேலைகளிற்கு விண்ணப்பிக்கவேண்டுமா?” – சிக்கந்தர்



(FASTGOSSIP|COLOMBO) – சிம்பாப்வே கிரிக்கெட் அணி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கட் பேரவையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக முற்றாக மனமுடைந்து போயுள்ளதாக அந்த அணியின் சகலதுறை வீரர் சிக்கந்தர் ரசா (Sikandar Raza)தெரிவித்துள்ளார்.

எங்கள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை எவ்வாறு இப்படி முடிவிற்கு வரமுடியும் என்பது குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

என்னால் இதனை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனது அணியின் ஏனைய வீரர்களும் எனது மனோநிலையிலேயே உள்ளனர் என நான் கருதுகின்றேன் என சிக்கந்தர் ரசா தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநிறுத்தியுள்ளது என மாத்திரம் சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது. எத்தனை வருடங்களிற்கு என எவரும் அறிவிக்கவில்லை. இரண்டு வருடங்களிற்கு இந்த தடை நீடித்தால் பலரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிம்பாப்வே வீரர்கள் கிரிக்கெட்டை கைவிட்டுவிட்டு வேறு வேலைகளிற்கு விண்ணப்பிக்கவேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை…

wpengine

TNA அரசியலிலும் குடும்ப ஆதிக்கமா??

wpengine

கிரிக்கெட் தெரிவுக் குழுவில் மாற்றம்…!

wpengine