உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கிரிக்கட் போட்டியின் போது இங்கிலாந்தில் இலங்கைத் இளைஞன் பலி



பிரிட்டிஷ் தமிழ் லீக் கிரிக்கெட் போட்டியின் போது மார்பில் பந்து தாக்கியதில் இங்கிலாந்தை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பலியானார்.

பாவலன் பத்மநாதன் என்ற 24 வயதான அந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமையன்று, லாங் டிட்டன் மைதானத்தில் நடந்த பிரிட்டிஷ் தமிழ் லீக் போட்டியின் போது அவரது மார்பில் பந்து தாக்கியதில் இதய பகுதியில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் மரணமடைந்தார்.

பாவலன் பத்மநாதன் இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதத்தில் சிட்னியில் நடந்த உள்ளூர் ஆட்டமொன்றில், கழுத்துப் பகுதியில் பந்து தாக்கியதால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிலிப் ஹ்யூக்ஸ் மரணமடைந்தார்.

(riz)

Related posts

சர்வதேச வெசாக் தினம் வியட்னாமில்…

wpengine

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05) பாராளுமன்றில்…

wpengine

27ம் திகதி முதல் 06 மணி நேர மின்வெட்டு அமுலுக்கு…

wpengine