உலக செய்திகள்சூடான செய்திகள்

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோ காலமானார்..


கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோ உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிடல் கெஸ்ட்ரோ மரணத்தை அதிபரும் அவரது சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர் பிடல் கெஸ்ட்ரோ.

இவர் வயோதிபத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் கெஸ்ட்ரோவிடம் கடந்த 2008–ம் ஆண்டு ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் தோன்றுவதில்லை.

கடந்த ஓகஸ்ட் மாதம் தான் அவர் தனது 90–வது பிறந்த தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் பிடல் கெஸ்ட்ரோ இன்று(26) காலமானார்.

அந்நாட்டு ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.

Related posts

பாகிஸ்தான் சபாநாயகருக்கு கொரோனா தொற்று

wpengine

ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது : ரணில் காட்டம்

wpengine

“மக்கள் பேரணி கொழும்புக்கு” இன்று(05) மாலை…

wpengine