உள்நாட்டு செய்திகள்

டெங்குவின் தலைதூக்களில்.. 66 பாடசாலைகளுக்கு பூட்டு…



கிண்ணியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட 66 பாடசாலைகளும் இன்று(15) முதல் மூன்று தினங்களுக்கு மூடப்படும் என்று கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

கிண்ணியாவில் டெங்குத் தாக்கத்தினால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று(14) வரையிலும் 12 பேர் மரணித்துள்ளார்.

இதனால் பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான காரணங்களை தெளிவுபடுத்தி கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர்களுடன் கலந்தாலோசித்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் பாடசாலை மூடப்படும் என்றும் அவர் கூறினார்.

(rizmira)

Related posts

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத் தொடர் நாளை

wpengine

மட்டக்களப்பு வடக்கு கிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு..!

wpengine

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் வவுனியா விஜயம்

wpengine