உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காவி உடையில் காடையர்களா? ;பிக்குகளின் உருவப்படம் தீயிட்டு எரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிதுறையை அவமதித்த தேர்ர்களை கைது செய்ய கோரி வவுனியா சுயாதீன இளைஞர்களால் கன்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிதுறையை அவமதித்த தேர்ர்களை கைது செய்ய கோரியும், இந்து ஆலயங்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு தெரிவித்து இன்று காலை ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது ஜனநாயாக ஆட்சியா, பௌத்த பேரினவாத பிக்கு ஆட்சியா, காவி உடையில் காடையர்களா, மதப்பிரச்சினையை தூண்டாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

ஆர்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி, சிவமோகன்,சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் மகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளை சார்ந்தோர், பொது அமைப்பினர், பொதுமக்கள்,என பலர் கலந்துகொண்டனர்.

Related posts

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

ஒரு லட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களின் பணிகள் விரைவில் நிரந்தரம்..!

wpengine

UPDATE – கெசல்வத்தை சம்பவம் தொடர்பில் நால்வர் கைது.

wpengine