உள்நாட்டு செய்திகள்

காவற்துறை வாகனம் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி..


குருணாகலை – மாஸ்பொத்த பகுதியில் காவற்துறை வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் காவற்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

குருணாகலை – புத்தளம் வீதியில் வெலலங்கே – மாஸ்பொத்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பேர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருந்தது.

அவர்களை நேற்று(15) இரவு கைது செய்ய சென்ற வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நதுன் குருகேவை நியமிக்க அமைச்சரவை அனுமதி..

wpengine

தமிழில் வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ஸ

wpengine

தரனாகம குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு போக்குவரத்து மட்டு…

wpengine