ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காலி, மாளிகாவத்தை, தர்கா நகர் பகுதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் இறுதி நாள் இன்று(13) என்பதால் பேரணிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த பாதுகாப்பு படையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இன்று(13) காலி, மாளிகாவத்தை மற்றும் தர்கா நகர் (அழுத்தகம) ஆகிய பிரதேசங்களில் நடைபெறவுள்ள மக்கள் பேரணிகளுக்கு பாதுகாப்பு படையினரால் அதிக கவனம் செலுத்திவருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காலி மற்றும் மாளிகாவத்தை ஆகிய பிரதேசங்களில் சஜித் பிரேமதாசவின் பிரச்சார பேரணி இடம்பெறவுள்ளதுடன், தர்கா நகரில் அனுர குமார திஸாநாயக்கவின் பிரச்சார பேரணி நடைபெறவுள்ளது.

முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் இந்த பிரதேசங்களினுள் இன்றைய தினம் சில இனவாத தரப்பினால் வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க பாதுகாப்புப் படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாக கூறப்படுகின்றது.

Related posts

கொழும்பில் அடைத்து வைக்கப்பட்ட எக்னொலிகொட! ஆதாரம் அம்பலம்

wpengine

மஹிந்தவின் வீட்டில் திருட்டு

wpengine

மகிந்தவுக்கு வைன் வழங்கும் தொழிலதிபர் யார்?

wpengine