உள்நாட்டு செய்திகள்

காலியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…



காலியில் இன்று காலை மூன்று மாடி ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

முதலாவது மாடியில் தீ ஏற்பட்டதை அவதானித்த கடையின் பாதுகாவலர் நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதன்போது இரண்டாவது மாடிக்கும் தீ பரவியுள்ளதுடன், தீயினால் எற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

போபகேயிற்கு எதிராக 58 பேரது கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர்..

wpengine

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனையாளராக சங்கக்கார…

wpengine

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம்

wpengine