உள்நாட்டு செய்திகள்

காலிமுகத்திடலில் பேரூந்தினால் மோதுண்டு பொலிஸ்காரர் பலி


கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர் ஒருவர் தனியார் பயணிகள் பேரூந்து ஒன்றினால் மோதுண்டு மரணமானார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

42 வயதான இந்த பொலிஸ்காரர் சங்ககிரி லா ஹோட்டல் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது பேரூந்தினால் மோதுண்டுள்ளார்.

மொரட்டுவையில் இருந்து கொழும்பை நோக்கி வந்த பேரூந்தே இவரை மோதியுள்ளது.

மற்றும் ஒரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தின் போது கடும் காயங்களுக்கு உள்ளான பொலிஸ்காரர் பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் உயிரிழந்தார்

Related posts

நாட்டிற்கு எதிரான ரணிலின் இரகசிய திட்டத்தை, அம்பலப்படுத்தும் கம்மன்பில..!

wpengine

கொரோனா தொடர்பில் அறிய விசேட தொலைபேசி இலக்கங்கள்

wpengine

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்..

wpengine