உள்நாட்டு செய்திகள்

காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிறிஸ்மஸ் மரத்திற்கு மீளவும் எதிர்ப்பு..



காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் உலகிலே உயரமான கிரிஸ்மஸ் மரம் காரணமாக காலிமுகத்திடலில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கே வேண்டியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை சுய தொழிலாளர்களின் சங்கத்தின் செயலாளர் ஈ.சி. டயஸ் நேற்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்;

உயரமான கிரிஸ்மஸ் மர வளாகத்தில் வர்த்தக கடையொன்றை பெற்றுக் கொள்ள 4 இலட்சம் ரூபாய் அறவிடப்படுவதாகவும், அந்தளவு பெரிய தொகைக்கு கடைகளை பெற்றுக்கொள்ள தமது சங்க உறுப்பினர்களுக்கு முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் காலிமுகத்திடலில் வர்த்தகத்தில் ஈடுபடும் தமது சங்க அங்கத்தவர்கள் சிரமத்துக்கு முகங்கொடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் எதிர்ப்பு காரணமாக குறித்த நிர்மாண பணிகள் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இன்று

wpengine

எச்.பி. நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நீக்கம்

wpengine

கடந்தாண்டுக்கான O/L பரீட்சை இன்று ஆரம்பம்

wpengine