உள்நாட்டு செய்திகள்

காலிக்கு நாளை நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் |  காலி) – அம்பலாங்கொடை மற்றும் பலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் நாளை(22) காலை 10 மணி முதல் பிற்பகல் 03 மணி வரையான 05 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலைய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அம்பலாங்கொடை, ஹிக்கடுவ, பலப்பிட்டிய, பெந்தொட்ட, எல்பிட்டிய, படபொல மற்றும் பத்தேகம அகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

wpengine

சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு

wpengine

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

wpengine