உள்நாட்டு செய்திகள்

காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வு மத்திய நிலையம் நிறுவ நடவடிக்கை



காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வு மத்திய நிலையம் ஒன்றைய அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் மாற்றமடைந்துள்ள காலநிலை தொடர்பாகவும், இந்த காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இந்த மத்திய நிலையத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த காலநிலை மாற்றத்தினால் விவசாய பயிர்களுக்கு ஏற்படும் விளைவுகளும் அதனை தடுப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளும், விவசாயிகளை தெளிவுபடுத்தும் நடவடிக்கையும் இந்த ஆய்வு நிலையம் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய காலநிலை தொடர்பான ஆய்வுகளை காலநிலை மத்திய நிலையமே மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் துமிந்த சில்வாவுக்கு சிறைமாற்றம்.

wpengine

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் இன்று விசேட சந்திப்பு…

wpengine