உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காலநியமன அடிப்படையில் மின் கட்டணங்களில் மாற்றம்..



வீட்டு மின் பாவணைகளின் மின் நுகர்வு முறையில் (நேரம்) மாற்றம் ஏற்படக்கூடிய கட்டண முறையை (கால நியமம்) தெரிவு செய்யும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார சபை என்பன ஒன்றிணைந்து குறித்த இந்த தீர்மானத்துக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனைகளுக்கு அமைய பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.

இதற்கமைய, மின்சார பாவனை கால நேரத்துக்கு அமைய, இரவு 10.30 – அதிகாலை 5.30 வரை பயன்படுத்தப்படும் மின்சார அலகு ஒன்றிற்கு 13 ரூபா அறவிடப்படவுள்ளது.

மேலும், அதிகாலை 5.30 – மாலை 6.30 வரை பயன்படுத்தப்படும் மின்சார அலகு ஒன்றிற்கு 25 ரூபா அறிவிடப்படவுள்ளது.

அத்துடன், மாலை 6.30 -இரவு 10.30 வரை பயன்படுத்தப்படும் மின்சார அலகு ஒன்றுக்காக 54 ரூபா அறிவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மின் பாவணை இடம்பெறும், மாலை 6.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், மின்சார பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த இந்த புதிய கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, புதிய மின்கட்டண முறைமை அறிமுக்கப்படுத்தப்படுவதன் ஊடாக, நுகர்வோருக்கு மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என மின்சார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

நுரைச்சோலை செயலிழப்பு : பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 5 நாட்கள் ஆகலாம்..!

wpengine

எனது கிரிக்கெட் உலகின் நாயகன் கோஹ்லி – தனஞ்சய.

wpengine

சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு விரைவான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு..

wpengine