உள்நாட்டு செய்திகள்

காற்றுடன் கூடிய மழை மேலும் அதிகரிக்கக்கூடும்



(FASTNEWS|COLOMBO) – இன்றிலிருந்து(16) 19ஆம் திகதி வரை தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வடமேல், மேல் மற்றும் தென் கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.. மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சி 71ஆவது அகவையில்..

wpengine

இலங்கைக்கு ஐந்து இலட்சம் தடுப்பூசிகள்

wpengine

இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது [UPDATE]

wpengine