உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கார்த்திக் இனை பங்களாதேஷ் அணிக்கு எதிராக உபயோகித்த உபாயம் குறித்து ஷர்மா கருத்து…



கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற சுதந்திர கிண்ண இருபதுக்கு -20 முக்கோணத் தொடரின் “கிண்ணத்தினை” இந்தியா அணி கைப்பற்றியிருந்தது. அது தினேஷ் கார்த்திக் இனது அபாரத் துடுப்பாட்டத்தினால் என்றால் மிகையாகாது.

போட்டியின் சிறப்பாட்ட வீரராக தேர்வு செய்யப்பட்ட தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் அதிகமான தன்னம்பிக்கையை உடையவர், அவரை எந்த சூழ்நிலையில் களம் இறக்கினாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார் என தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் இதுகுறித்து பேசுகையில்;

‘இக்கட்டான நிலையில் எந்த துடுப்பாட்ட வரிசையிலும் அவரை துடுப்பாட அழைத்தாலும் அதில் சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கையை அவர் வைத்திருக்கிறார். அவரை வரிசையிலோ அல்லது 7-வது வரிசையிலோ களம் இறக்கினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர், எனவே இவரைப் போன்ற வீரர்தான் அணிக்கு அவசியம். நான் ஆட்டமிழந்ததும், தினேஷ் கார்த்திக் அடுத்து களமிறங்க தயாரானார்.

ஆனால் நான் அவரை சிறிது பொறுங்கள், 7-வது வீரராக நீங்கள் களமிறங்கலாம் எனக் கூறினேன். அந்த சூழலில் எனது அறிவுறையைக் கேட்டு அவர் சிறிது வேதனை அடைந்தார். இருப்பினும் நான் அவரிடம் நீங்கள் 7-வது வீரராக களமிறங்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆட்டம் கடினமாக மாறிக் கொண்டிருப்பதால் உங்களிடம் இருக்கும் அத்தனை திறமையையும், கடைசி 3 ஓவர்களில் பயன்படுத்துங்கள் என கூறினேன்’

 

_Rishma

Related posts

நாடளாவிய ரீதியாக இன்புளுவென்சா தொற்று

wpengine

உலக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

wpengine

கட்சிப் பதவிகளில் இருந்து இசுரு தேவப்பிரிய நீக்கம்

wpengine