உள்நாட்டு செய்திகள்

காயங்களுடன் யோஷித வைத்தியசாலையில் அனுமதி



ஹெவ்லொக் விளையாட்டு கழகத்திற்கும் கடற்படை விளையாட்டு கழகத்திற்கும் இடையில் கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற றக்பி போட்டியில் முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பு நவலோக்க மருத்துவமனையில் அவர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். போட்டியில் இடைநடுவில் ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தின் வீரர்கள் யோஷித்தவை சுற்றிவளைத்து தாக்கியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் றக்பி போட்டிகளின் போது யோஷித்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ரோஹித்த ராஜபக்ஷ ஆகியோரின் அருகில் கூட எதிரணி வீரர்கள் நெருங்க முடியாதபடி விளையாட்டு வீரர்களாலேயே வலயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது அப்படியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் எதிரணி வீரர்களில் பல்வேறு இலக்குகளை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் யோஷித்த ராஜபக்ஷ மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் அது வழமையாக விளையாட்டின் போது ஏற்படும் விபத்து எனவும் ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

Related posts

தங்க மயில் விருது காணமல்போன சம்பவம் தொடர்பில் ஐவர் கைது…

wpengine

புத்தளம் மாவட்ட கூட்டணி பா.உறுப்பினர்கள் ‘மொட்டு’ பக்கம்.. – வென்னப்புவயிலும் அனைவரும் மொட்டுக்கு ஆதரவு..

wpengine

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

wpengine