கேளிக்கை

காதலியை கரம்பிடித்தார் விராட்…



இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, பொலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் நேற்று திங்கட்கிழமை திருமணம் செய்துகொண்டனர்.

இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ விராட் , அனுஷ்கா திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
“இன்று நாம் ஒருவருக்கொருவர் என்றென்றும் அன்புடன் பிணைக்கப்பட்டிருப்போம் என்று உறுதியளித்தோம். உங்களுடன் இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கு உண்மையிலேயே நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த அழகான நாள் எங்கள் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அன்பு மற்றும் ஆதரவோடு மிகவும் சிறப்புமிக்கதாக இருக்கும். எங்கள் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தமைக்கு நன்றி” என்று அதில் கூறப்பட்டிருந்தது இவர்களுக்கு பல்வேறு பிரபலங்களும் நண்பர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

virat anushka

Related posts

சிவகார்த்திகேயன் படத்தில் ரீஎன்ட்ரி ஆகும் விஜய் பட நடிகை…

wpengine

‘சாரங்க திசாநாயக்க’வுக்கு கிடைத்த விசேட வாழ்த்துச் செய்தி – Photos

wpengine

மூச்சுத் திணறல் காரணமாக விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

wpengine