கேளிக்கை

காதலர் தின முதல் வெளியீடாக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள்.

மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் சிங்கிள் டிராக் இன்று(14) காதலர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குப்பை வேறுவிதத்தில் பாதைக்கு வந்தது.. [PHOTOS]

wpengine

நடிகை சனம்ஷெட்டி பிரச்சினை; இலங்கை தர்ஷன் சாதிப்பாரா? (VIDEO)

wpengine

விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு வழங்கிய உணவில் ஆணுறுப்பு.. (PHOTO)

wpengine