கேளிக்கை

பிறந்தநாளன்று காதலன் இல்லாமையினால் ஸ்ருதியின் உருக்கமான வாழ்த்து…



நெருங்கிய நண்பரும், காதலருமான மைக்கேல் கோர்சேவ், தன்னுடன் இல்லாததால் மிகவும் வருத்தமடைந்திருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

சமீபத்தில் இந்தியா வந்த மைக்கேல் கோர்சேவை தனது தாய் சரிகாவிடம் ஸ்ருதி அறிமுகம் செய்து வைத்தார். தந்தை கமல்ஹாசனுடன் சென்னையில் நடந்த நடிகர் ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் மைக்கேலுடன் கலந்து கொண்டார்.

இருவரும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் தான் ஸ்ருதிஹாசன் புதிய படங்களில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு மைக்கேல் கோர்சேவுக்கு பிறந்தநாள் வந்தது. ஆனால் அவர் லண்டனில் இருந்தார். ஸ்ருதிஹாசன் இந்தியாவில் இருந்தார்.

இந்நிலையில், தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில், ‘என் நெருங்கிய நண்பர், முக்கிய தருணங்களில் உடன் இருப்பவர், விசித்திரமான உரையாடல்களில் சிறந்தவர், கலை உலகில் உடன் பயணிப்பவர். எல்லாவற்றுக்கும் மேலாக என்னுடைய எல்லா சுற்றிலும் கூடவே சிரிப்பவர். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். பிறந்த நாளில் மைக்கேல் அருகில் இல்லையே என்றும் ஸ்ருதி வருத்தப்பட்டுள்ளார்.

Related posts

காதலை ஏற்காததால், மனமுடைந்து ஆண் போல் முடி அழகை மாற்றிய ஓவியா.. (Photos)

wpengine

ஆடை படத்துக்கு தடை கோரி மனு

wpengine

உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோவில் கண்டுபிடிப்பு!

News Editor