உள்நாட்டு செய்திகள்

காணாமல் போயிருந்த 19 வயது பெண் கைது – இரண்டு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு…



கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய வத்சலா பெரேரா உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 வயது மற்றும் 14 வயதுடைய ஏனைய இரண்டு சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயது குழந்தையின் தாயான 19 வயதுடைய வத்சலா பெரேரா, அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதான தமிழ் சிறுமி ஆகிய முவரும் காணாமல் போயிருந்தனர்.

அவர்களில் 19 வயதுடைய வத்சலா பெரேரா மற்றும் அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி ஆகிய இருவரும் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்ததுடன், 14 வயதான தமிழ் சிறுமி கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததார்.

Related posts

குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்…

wpengine

மண் சரிவு அபாயத்தால் 20 குடும்பங்கள் வௌியேற்றம்…

wpengine

சட்டத்தரணிகள் இருவருக்கும் பிணை

wpengine