ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காணாமல் போன யுவதி சடலமாக மீட்பு


மஹியங்கனை-தம்பகொல்ல பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் யுவதி, மஹியங்கனை-அலுகெடியாகவ பிரதேசத்திலுள்ள தேயிலை தோட்டத்திலிருந்து இன்று(2) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பிரதேசத்தை சேர்ந்த ரம்யா விதர்ஷனி என்ற 18 வயது யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் அரைநிர்வாண கோலத்தில் காணப்பட்டதாகவும் சடலத்துக்கு அருகில் இரண்டு கையடக்கதொலைபேசிகள் மற்றும் பாதணி ஜோடி என்பன காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கெமுனுபுர, ஆடைத் தொழிற்சாலையில் தொழில்புரிந்து வந்த இவர், கடந்த வாரம் காணாமல் போயிருந்ததுடன் இவர் தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையிலே அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மஹிந்தவில் தொல்லை தாங்காது, நாமல் தீர்மானமிக்க திடீர் முடிவில்..

wpengine

இலங்கை மீன்பிடி படகில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்!

wpengine

குழந்தையை பார்க்க வருமாறு அழைத்து கள்ளக்காதலுடன் ஓடிய மனைவிக்கு சரமாரி வெட்டு

wpengine