உள்நாட்டு செய்திகள்

காணாமல் போனோரின் உறவுகளை இன்று ஜனாதிபதி சந்திப்பு..



வடக்கின் சகல மாவட்டங்களிலும் இருந்து பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக காணாமல் போனோரின் உறவுகளை இன்று(06) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார்.

மாகாணத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்களுக்கான தேர்வு மற்றும் பயண ஒழுங்குகள் அனைத்தும் குறித்த மாவட்டச் செயலகங்களே முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனோரின் உறவுகள் கடந்த 200 நாட்களாக தமது உறவுகளின் நிலையைத் தெரிவிக்குமாறு கோரி யாழ் மருதங்கேணி , கிளிநொச்சி , முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இடங்களில் போராட்டம் நடாத்தி வரும் சூழலில் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் காவல்துறை விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!!!

wpengine

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக சஜித் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

wpengine

காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வு மத்திய நிலையம் நிறுவ நடவடிக்கை

wpengine