உள்நாட்டு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக உறுப்பினர்களின் கொடுப்பனவு தொடர்பான யோசனை இன்று(04) பாராளுமன்றில்…


காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவை வழங்குதல் தொடர்பான யோசனை இன்று(04) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அலுவலகத்தின் தலைவருக்கு ஒரு இலட்சம் ரூபா மாதாந்த கொடுப்பனவும், தொலைபேசிக் கொடுப்பனவு, மாதாந்தம் 225 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவுடன் உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றும் வழங்கப்படவுள்ளது.

குறித்த அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 75,000 ரூபா கொடுப்பனவும், தொலைபேசிக் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு என்பன வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.

Related posts

மிலான் ஜயதிலக எம். பி உட்பட 12 பேருக்கு பிணை

News Editor

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆளுங்கட்சியில்?

wpengine

இறுதித் தீர்மானம் நாளை

wpengine