உலக செய்திகள்

காங்கோவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 33 பேர் மரணம்…



காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கோவின் லுபும்லாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு நேற்றைய தினம்(12) எரிபொருளை ஏற்றிய 13 பெட்டிகளில் கொண்ட ரயில் பயணித்துள்ளது.
அந்த ரயில் லுபுடி என்னுமிடத்தில் சரிவில் ஏறியபோது எதிர்பாராத விதமாக தடம்புரண்டுள்ளது.

இவ்விபத்தில் ரயிலில் பயணம் செய்த 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ரயில் சரக்கு ரயில் என்பதால் அதில் பயணித்த அனைவரும் சட்டவிரோத பயணம் செய்ததாகவே கருதப்படுவர் என ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related posts

கருணை கொலைக்கு அரசு அனுமதி

wpengine

Astra Zeneca கொவிட்-19 தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த அனுமதி

wpengine

உயிர்க்கொல்லி எபோலாவிற்கு மருந்து கண்டுபிடிப்பு

wpengine