உள்நாட்டு செய்திகள்

காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகு கடற்படையினரால் கைப்பற்று..



காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த 32 பேர் கொண்ட வெளிநாட்டு படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த படகு காங்கேசன்துறையில் பிரதேசத்தில் இருந்து 12 கடல் மைல் தூரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று(30) காலை குறித்த படகு சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த படகில் இந்தியாவைச் சேர்ந்த 2 பேர், மியன்மாரைச் சேர்ந்த 14 பேர் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது…

wpengine

இஷாரா தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கிய நபருக்கு நேர்ந்த கதி

Azeem Kilabdeen

விடுமுறையை இரு வாரம் நீடிக்க கோரிக்கை

wpengine