உள்நாட்டு செய்திகள்

கஹவத்தை பிரதேசத்தில் சிறுபான்மையினருக்கு சொந்தமான இரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை..



இரத்தினபுரி மாவட்டத்தில், கஹவத்தை பிரதேசத்தில் சிறுபான்மையினருக்கு சொந்தமான இரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(23) அதிகாலை சுமார் 2 மணியளவில் குறித்த இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 4 மாடிகளைக் கொண்ட ஹாட்வெயர் ஒன்றும், தமிழ் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றுமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு திட்டமிட்ட செயலாகவே கருதப்படுவதாக சிவில் அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், வழமை போல் இதுவும் ஒரு மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ என பொலிஸார் சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்து வருவதாகப் பிரதேச வாசிகள் மேலும் விசனம் தெரிவித்துள்ளனர்.

(rizmira)

Related posts

கூரிய ஆயுதத்தால் நபரொருவர் குத்திக் கொலை

wpengine

தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen

முன்னாள் பிரதமரின் சலவை கணக்கு ஆறு லட்சம் – ஹர்ஷ

wpengine