உள்நாட்டு செய்திகள்

கவலை வெளியிட்ட அதானி குழுமம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் கீழ், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதானி நிறுவனத்திற்கு இலங்கையின் இரு மின்னுற்பத்தி திட்டங்களை வழங்கியதாக, இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது ஏமாற்றமளிப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அண்மையில், இலங்கையில் இரண்டு மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்குவதற்கு தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக, எம்.எம்.சீ. பெர்டினண்டோ, கோப் எனப்படும் பொதுமுயற்சிகள் பற்றிய குழுவில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினண்டோ மன்னிப்பு கோரியிருந்ததுடன், தமது பதவி விலகல் கடிதத்தையும் வலுசக்தி அமைச்சரிடம் சமர்ப்பித்த நிலையில் பதவி விலகினார்.

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அதானி குழுமம், இவ்விடயம் தமக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது.

Related posts

வெளிநாட்டு நாணயம் கடத்தும் முயற்சி முறியடிப்பு

wpengine

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது…

wpengine

சமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு கணினி அவசர பதிலளிப்பு மையம் எச்சரிக்கை…

wpengine