கேளிக்கை

கவர்ச்சி படங்கள் வெளியிடும்போது வெட்கத்தை ஒதுக்கி வைக்கும் ஹீரோயின்…



முகமூடி படத்தில் நடித்திருப்பவர் பூஜா ஹெக்டே. இந்தியில் ஹவுஸ்புல் 4ம் பாகம், தமிழ், தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

திரையுலகுக்கு வந்து 6 வருடங்கள் ஆன நிலையில் இதுவரை மொத்தம் சுமார் 10 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். வெட்கப்படும் சுபாவம் கொண்ட பூஜா மற்றவர்களிடம் பேச தயக்கம் காட்டுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் கவர்ச்சி படங்கள் வெளியிடும்போது அந்த வெட்கத்தை வெளிக்காட்டாமல் போஸ் தருகிறார். இன்னொரு விஷயத்துக்கும் அவர் வெட்கத்தை ஒதுக்கி வைத்து விடுகிறார்.

அது என்ன என்றபோது பதில் அளித்தார். ‘நடனம் ஒரு பெரிய கலை. அது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. பொதுவாக நான் ரொம்பவும் வெட்கப்படும் குணம் கொண்டவள்.

நடனம் என்று வந்துவிட்டால் வெட்கத்தை தூக்கி எறிந்துவிடுவேன். எவ்வளவு கடினமான அசைவு கொண்ட நடனமாக இருந்தாலும் ஆடுவேன். படங்களில் நடனம் ஆடும் வாய்ப்பு இப்போது நிறைய அமைகிறது. இனிவரும் படங்களில் எனது நடன காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும்’ என்றார் பூஜா ஹெக்டே.

Related posts

பிரபல நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா

wpengine

பிரபல பாலிவுட் நடிகருடன் நித்யாமேனன்…

wpengine

ஆரவ்வுடன் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்

wpengine