கேளிக்கை

கவர்ச்சி, நெருக்கமான காட்சிகளுக்கு நடிக்க மறுக்கும் பிரபல நடிகை…


தமிழ் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆண்ட்ரியா, இனி நடிக்கும் படங்களில் கவர்ச்சி, நெருக்கமான காட்சி மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆண்ட்ரியா தேர்ந்தெடுத்து தான் படங்களில் நடிப்பார். பிடித்த வேடம் என்றால் கவர்ச்சியாக நடிக்கவோ, நெருக்கமாக நடிக்கவோ தயங்க மாட்டார். சமீப காலமாக ஆண்ட்ரியாவின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்து வருகிறது.

விஸ்வரூபம் 2 படத்தில் ஆக்‌‌ஷன் காட்சிகளிலும் நடித்திருந்தார். அடுத்து அவர் நடித்து இருக்கும், வடசென்னை படத்திலும் முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கவுள்ளார்.

எனவே இனி இமேஜ் வி‌ஷயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இனி லிப்லாக், கவர்ச்சி, நெருக்கமான காட்சிகளிலோ, புகை பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று கதை கேட்கும்போதே கூறிவிடுகிறாராம் ஆண்ட்ரியா.

Related posts

விருது நிகழ்ச்சியில் மட்டும் எப்படி கலந்து கொள்ளலாம் – சர்ச்சையில் சிக்கிய நயன்

wpengine

சுஷாந்த் இனது இரண்டாவது காதலியிடம் விசாரணை

wpengine

பத்திரிகையாளரை மணக்கிறார் பிரபல நடிகை…

wpengine