உள்நாட்டு செய்திகள்

கழுத்தில் பாய்ந்த கூரிய தடி: வெற்றிகரமாக அகற்றிய வவுனியா வைத்தியர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வவுனியா பொது வைத்தியசாலையில் கழுத்தில் கூரிய தடி ஒன்று குற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திர சிகிச்சையினால் கூரிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த சத்திர சிகிச்சை கடந்த (24.12.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி மறுபக்கம் வந்த முதியவர் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த முதியவருக்கு வைத்தியசாலையில் உரிய நேரத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சை மூலம் அவரது கழுத்தில் குற்றிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த வெற்றிகரமான சத்தி்ர சிகிச்சையினை உணர்வழியியல் மருத்துவ நிபுணர் நாகேஸ்வரன் தலைமையிலான மயக்கமருந்து அணியினருடன் இணைந்து சத்திர சிகிச்சை நிபுணர் ரஜீவ் நிர்மலசிங்கம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவு…

wpengine

பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்புகள் நீதிமன்றில் சமர்பிப்பு…

wpengine

இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடு

wpengine