Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

களுபோவில போதனா வைத்தியசாலை; வார்ட் தொகுதி திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – களுபோவில போதனா வைத்தியசாலையில் மூடப்பட்டிருந்த வார்ட் தொகுதி இன்று திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இரண்டு வாரங்களின் பின்னர் இன்று (15) திறக்கப்பட்டுள்ளது.

களுபோவில போதனா வைத்தியசாலையில் இரு வாரங்களுக்கு முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, 15 நோயாளர்களும்  வைத்தியசாலை பணியாளர்கள் 20 பேரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பணியாளர்களும், தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்துகொண்டு இன்றையதினம் (15) பணிக்குத் திரும்பியுள்ளதாக, வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

முழு நாட்டையும் முடக்கி வைக்க முடியாது

wpengine

UPDATE – சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மாலிக் அசீஸ் தொடர்பிலான விசாரணைகள் CID இன் கீழ்

wpengine

சட்டமூலம் ஒன்று தொடர்பில் சபாநாயகர் விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen