உள்நாட்டு செய்திகள்

களுத்துறை பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவருக்கு HIV…



களுத்துறை பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்றியுள்ளமை தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து மொடலிங் கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, களுத்துறை தெற்கு பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களில் இரு மாணவர்களைப் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன் போது தாங்கள் தொடர்பு வைத்ததாக மொடலிங் கலைஞர் ஒருவரின் பெயரை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மொடலிங் கலைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு களுத்துறை பிரதம நீதிவான் பாரதி விஜேயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபரை சிறைச்சாலையில் தனியான ஓரிடத்தில் தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகளை சிறைச்சாலை வட்டாரங்கள் மேற்கொண்டிருந்தன.

பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்த இரு மாணவர்களின் பெற்றோர்களும் வெளிநாடுகளில் தொழில் செய்வதாகவும் உறவுமுறை பெண் ஒருவருடனேயே இவர்கள் வாழ்ந்து வருவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

(rizmira)

Related posts

2.9 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு – விடுதலை கோரி துமிந்தவும் மேன்முறையீடு.

wpengine

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

wpengine