உள்நாட்டு செய்திகள்

களுத்துறையை அண்மித்த பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் விநியோகம் தடை.


களுத்துறையை அண்மித்த சில பிரதேசங்களில் நாளை(22) 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி வாத்துவ, பொதுபிடிய, வஸ்கடுவ, களுத்துறை – வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பெந்தோட்டை, பயாகல, மக்கொன, பேருவளை, களுவாமோதரை, மொரகல்ல, தர்கா நகர், அளுத்கம, பேம்புவல மற்றும் பிலமினாவத்தை போன்ற பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையான காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்

களுத்துறை, கேத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோக தடை காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

wpengine

கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1089

wpengine