உள்நாட்டு செய்திகள்

கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவு அழைப்பு



(FASTNEWS | COLOMBO) – நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(03) ஆஜராகுமாறு கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தானவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வர்ண நிழற்படத்தை பாடசாலைப் புத்தகங்களில் அச்சிட்டதால் நிதி வீண் விரயம் ஏற்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பில், கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி. இலங்கசிங்கவும் வாக்கமூலம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்..!

wpengine

மன்னார் மாவட்ட காணி கபளீகரப்பிரச்சினைக்கு கொழும்பில் உயர் மட்ட மாநாட்டுக்கு ஏற்பாடு மாவட்ட எம் பிக்களின் பங்கேற்புடன் தீர்வு காண முயற்சி

wpengine

குமார வெல்கம தாக்கல் செய்த உரிமை மீறல் மனு நவம்பர் மாதம் விசாரணைக்கு…

wpengine