உள்நாட்டு செய்திகள்

கல்வியியற் கல்லூரி மாணவர்கள் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 12 இல்…



கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மார்ச் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு க. பொ.த. உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காகவே மாணவர்கள் கல்வியில் கல்லூரிக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக மாவட்ட அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை மாவட்ட மட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை விட சுமார் மூன்று மடங்கினர் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இதேவேளை, நாடு முழுவதிலுமுள்ள 19 கல்வியில் கல்லூரிகளுக்கு 27 கற்கைநெறிகளுக்காக 4 ஆயிரத்து 745 பேர் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளிக்கிழமை வரை ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

wpengine

இலங்கையில் பிறந்த ஆயிஷா, பிரித்தானியாவில் நீதிபதியாக நியமனம்!

wpengine

போதைப் பொருள் வர்த்தகரான கிஹான் சந்தருவான் கைது…

wpengine