உள்நாட்டு செய்திகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப இறுதித் திகதி…



கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதன் பின்னர் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாதென்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜெயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுப் போக்குவரத்து வழமைக்கு

wpengine

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நாளை…!!!

wpengine

பனாமா ஆவணக் கசிவினது முழுமையான விவரங்கள் இன்று வெளியாகிறது.?

wpengine