உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த ரயிலில் ஏற்பட்ட முறுகல் நிலையில் நபரொருவரை தள்ளி கொலை..



காங்கேசன்துறை இலிருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த ரயிலில் நபரொருவர் மற்றுமொரு நபருடன் ஏற்படுத்திய தகராறு அதிகரித்து ஒருவர் மற்றொருவரை புகையிரதத்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகம புகையிரத நிலையத்திற்கும், ஹோபே புகையிரத நிலையத்திற்கும் இடையே குறித்த இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ராகம காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் இனங்காணப்படாத நிலையில், அவர் 40 – 45 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்கலாம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சடலம் கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று(16) பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

உயிரிழந்த நபருடன் தகராறில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

(rizmira)

Related posts

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு புதனன்று வாக்கெடுப்பு

wpengine

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நண்பகல் முதல் வேலை நிறுத்தத்தில்…

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியும் இராஜினாமா?

wpengine