ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கல்கிஸ்ஸையில் ஒருவர் கொலை



கல்கிஸ்ஸை, பொருபனை பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த மேசன் வேலை செய்யக் கூடிய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் ஹக்மனைப் பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சாகல மற்றும் ருவானுக்கு முடியாததை பொன்சேகாவிடம் கொடுத்துள்ளனர்!

wpengine

அசல் பெண் உருவில் இருந்தாலும் இது ஒரு தின்பண்டம்… (Photos)

wpengine

மைத்திரியின் அரசியல் நோக்கங்களுக்காகவா ஜனாதிபதி விருது விழா…?

wpengine