உள்நாட்டு செய்திகள்

கலேவெல வாகன விபத்தில் இருவர் பலி



கலேவெல தலகிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

கலேவெலயிலிருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, தலகிரியாகம வீதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவர் காயமடைந்தது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இருவர் உயிரிழந்தனர்.

கலேவெல பகுதியியை சேர்ந்த இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் தங்காலை – ஹம்பாந்தோட்டை வீதியின் ரன்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து வந்த மண் ஏற்றி வந்த லொறி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள சந்தை பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

(கே.அஸீம் முஹம்மத்)

Related posts

ரயில்வே, தனியார் பஸ்கள் நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு

wpengine

மதிப்பீட்டு அதிகாரிகள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்..

wpengine

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல புதிய நடவடிக்கைகள்…

wpengine