உலக செய்திகள்

கலிபோர்னியா காட்டுத்தீ – ஆயிரகணக்கான மக்கள் வெளியேற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.

இந்த காட்டுத்தீக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்கள் காரணமாக 367 இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருகிறது.

இந்த காட்டுத்தீயால் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான காடுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகி உள்ளதுடன், 480 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்பு வீரர்கள் உள்பட 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், 1 இலட்சத்து 75 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

காட்டுத்தீயினை கட்டுப்படுத்த 375-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், 10 ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்த ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக டிரம்ப் இனது பிரசாரங்கள் ஆரம்பம்

wpengine

மஹிந்தவுக்கு பாகிஸ்தான் வருமாறு இம்ரான் வேண்டுகோள்

wpengine

உருமாறும் கொரோனா

wpengine