உலக செய்திகள்

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) -அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இரு பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், கலிபோர்னியா மாநிலத்தின் இர்வின் நகர பகுதியில் 12 ஆயிரத்து 600 ஏக்கர் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 இலட்சத்து 50 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பசிபிக் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் 750 தீயணைப்பு வீரர்களும், 14 ஹெலிகொப்டர்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் மிக மோசமாக படுகாயமடைந்துள்ளனர்.

Related posts

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு…

wpengine

விமான விபத்தில் உயிரிழந்தோரில் 64 பேர் இசைக்குழு உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.. (UPDATE)

wpengine

உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களை முற்றுகையிடுமாறு, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அழைப்பு..!

wpengine