உள்நாட்டு செய்திகள்

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்ட சம்பவம் – 08 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்



(FASTNEWS|COLOMBO ) – கொழும்பு – கண்டி வீதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய பிரமுகரான ஆசிரியர் தினேஷ் நுவன் அமரதுங்க உட்பட 08 பேரை தொடர்ந்தும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று அத்தனகல்ல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவால் கொழும்பு குற்றப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

´ஒசுசல´ மருந்தகங்களும் திறப்பு

wpengine

மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

wpengine

அதிஷ்ட லாப சீட்டு விற்பனையாளர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில்..

wpengine