உள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வவுச்சர்



கர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதம் ஒருமுறை வழங்கப்படும் போசனைப் பொருட்களுக்கான பொதிக்கு பதிலாக பண வவுச்சர் வழங்குவதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு, இதுகுறித்த யோசனையினை கெபினட் அமைச்சரவை முன் சமர்ப்பித்துள்ளதாகவும், போசனைப் பொருட்களுக்கான பொதியினை பெறுகையில் கர்ப்பிணிப் பெண்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாக முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறித்த அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

அதனால், குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வவுச்சருக்கான பொருட்களை கொள்வனவு செய்ய அரசாங்க சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவிக்கபடுகின்றது.

Related posts

துபாயில் கைது செய்யப்பட்ட உதயங்க’வை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை…

wpengine

காணாமல் போதல் குறித்த சர்வதேச சாசனம் குறித்த சட்ட மூலம் இன்று நாடாளுமன்றில் விவாதிக்கப்பட மாட்டாது..

wpengine

இந்தியாவுக்கு வெற்றியை அளித்து விடைபெற்றார் சங்கா

wpengine