Uncategorized

கருப்பையின் நச்சுக்கொடியை சாப்பிடும் அமெரிக்க நடிகை



இங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்ட வீரரான வேய்ன் ரூனியின் மனைவியான தொலைக்காட்சி நடிகை கோலீன் மேரி ரூனி தனது கருப்பையின் நச்சுக்கொடியை மாத்திரைகளாக்கி சாப்பிட தொடங்கியுள்ளார்.

பிரசவத்துக்கு பிந்தைய உடல் பாதிப்புகளில் இருந்து மீண்டுவரவும், புத்துணர்ச்சியுடம் திகழவும் வயிற்றில் வளரும் கருவுக்கு ஊட்டம் கொடுக்கும் உறுப்பான நச்சுக்கொடி உதவிகரமாக இருப்பதாக அறியவந்த கோலீன், சமீபத்தில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது, கருப்பையில் ஒட்டியிருந்த நச்சுக்கொடியை அகற்றி லிவர்பூல் நகரில் உள்ள பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அவரது நச்சுக்கொடியை உலரவைத்து, பக்குவப்படுத்தி, பொடியாக்கிய அந்த நிறுவனம் தற்போது அதை மாத்திரை வடிவில் அனுப்பி வைத்துள்ளது. இந்த விஷயத்தை தனது டுவிட்டர் அபிமானிகளுடன் கோலீன் மேரி ரூனி பகிர்ந்துள்ளார்.

இவர் மட்டுமின்றி, ஏற்கனவே பிரபல ஹாலிவுட் கதாநாயகி கிம் கர்டாஷியன் தனது இரு பிரசவத்தின்போது அகற்றப்பட்ட நச்சுக்கொடியை மாத்திரைகளாக்கி சாப்பிட்டு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த மாத்திரைகளை ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் புத்துணர்ச்சியாகவும், தெம்பாகவும் இருப்பதாக உணர்கிறேன் என கிம் கர்டாஷியன் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

பெண் ஜனாதிபதி வேட்பாளர்; யார் இந்த கலாநிதி அஜந்தா பெரேரா?

wpengine

சர்வதேசக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர்

wpengine

ஐ.தே.கட்சியில் இணையும் சுதந்திரக்கட்சியின் பிரபல அரசியல்வாதிகள்

wpengine